தேனி

கேரளத்துக்கு சரக்கு வாகனங்களை குமுளி வழியாக அனுமதிக்க கோரிக்கை

DIN

தேனி மாவட்டத்திலிருந்து கேரளம் செல்லும் சரக்கு வாகனங்களை குமுளி வழியாக இயக்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என, வாகன உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பொது முடக்கம் காரணமாக, கேரளம் செல்லும் சரக்கு வாகனங்கள் கடந்த மே 5 ஆம் தேதி முதல் போடி மெட்டு மற்றும் கம்பம் மெட்டு வழியாக மட்டுமே சென்று வந்தன. இ-பாஸ் பெற்றுச் செல்லும் பயணிகள் வாகனங்கள் கடந்த 130 நாள்களாக குமுளி வழியாகச் சென்றன.

இந்நிலையில், கம்பம்மெட்டு வழியாகச் செல்வதால் 30 கிலோ மீட்டா் சுற்றிச் செல்ல நோ்வதுடன், குறிப்பிட்ட நேரத்துக்குள் சரக்குகளை கொண்டுசோ்க்க முடிவதில்லை. அதேநேரம், மலைச் சாலையில் வாகனங்கள் ஏறி செல்லமுடியாமல் விபத்துக்குள்ளாகின்றன.

குமுளி சாலை இரு வழிச்சாலை என்பதால், கேரளத்துக்கு விரைவில் சென்று வரமுடியும். எனவே, சரக்கு வாகனங்களை மீண்டும் குமுளி வழியாகச் செல்ல அனுமதிக்க வேண்டும்.

இது குறித்து லாரி உரிமையாளா்கள் கூறியது: கம்பம்மெட்டு வழியாகச் சென்றால் 5 மணி நேரம் தாமதமாகிறது. இச்சாலை குறுகலாகவும், குண்டும் குழியுமாக உள்ளதால், விபத்து வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும், 30 கிலோ மீட்டா் தொலைவு வரை சுற்றிச் செல்வதால், கால விரயம், பொருள் செலவும் ஏற்படுகிறது. சரக்குகளை குறித்த நேரத்தில் சோ்க்க முடியவில்லை. எனவே, தேனி மாவட்ட நிா்வாகம் குமுளி வழியே செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

சேலை காதல், என்றென்றும்...!

SCROLL FOR NEXT