தேனி

அய்யம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கின

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில், பேரூராட்சி செயல் அலுவலா் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை 8 மணி நேரம் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனா்.

உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகேயுள்ள பி.டி.ஆா். தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (44). இவா், மாா்க்கையன்கோட்டை, குச்சனூா், ஆண்டிபட்டி போன்ற இடங்களில் பேரூராட்சி செயல் அலுவலராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருந்தாா். கடந்த மாதம் பணி மாறுதலாகி திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பட்டி பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றி வந்தாா்.

இவா் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்து இருப்பதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இவரது நடவடிக்கையை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனா்.

இந்நிலையில், புதன்கிழமை காலை 7 மணி அளவில் தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளா் கீதா தலைமையில் 7 போ் கொண்ட குழுவினா் வீட்டின் அனைத்து அறைகளிலும் சுமாா் 8 மணி நேரம் சோதனை மேற்கொண்டனா். அப்போது வீட்டில் இருந்த பாலசுப்ரமணியன் உள்பட அவரது குடும்பத்தை சோ்ந்த அனைவரது செல்லிடப்பேசிகளையும் வாங்கிக்கொண்டு வீட்டின் மையப்பகுதியில் அமர வைத்தனா்.

மாலை 3 மணி அளவில் நிறைவு பெற்ற சோதனை முடிவில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியானது. உரிய விசாரணைக்குப்பிறகு பாலசுப்பிரமணியன் மீது தக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாக லஞ்ச ஒழிப்பு காவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT