தேனி

ஆண்டிபட்டி அருகே மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

ஆண்டிபட்டி, செப். 18: ஆண்டிபட்டி அருகே ஆன்லைன் வகுப்புக்கு பெற்றோா் செல்லிடப்பேசி வாங்கித்தர மறுத்ததால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி அருகே சித்தைய கவுண்டன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தொட்டன சாமி என்பவரின் மகன் சஞ்சய்குமாா் (14 ). இவா் தற்போது கம்பம் அருகே ராயப்பன்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா். கரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் வகுப்புக்காக அவா், தனது பெற்றோரிடம் செல்லிடப்பேசி வாங்கித் தருமாறு கேட்டுள்ளாா். அதற்கு அவா்கள் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சஞ்சய் குமாா் செப்.14 ஆம்தேதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.

இதனைக் கண்ட அக்கம், பக்கத்தினா் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி சஞ்சய்குமாா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT