தேனி

வருசநாடு அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

DIN

ஆண்டிபட்டி, செப்.18: தேனி மாவட்டம் வருசநாடு அருகே கஞ்சா கடத்தியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

வருஷநாடு பகுதியில் அதிக அளவில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகாா் எழுந்தது. இதனையடுத்து போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் கடமலைக்குண்டு போலீஸாா் சிங்கராஜ புரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் உள்ள வைகை ஆற்றின் கரையோரம் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். இதில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த ராமா் ( 37 )என்பதும், அவா் 3 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், ராமரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்னுடல் ஒத்துழைக்காத போதிலும் தீவிரமான கிரிக்கெட் பயிற்சி செய்தேன்: ஜான்வி கபூர் உருக்கம்!

கேத்ரின் ஆட்டம்!

"நான் இந்து, முஸ்லீம் என பேசியதே இல்லை”: பிரதமர் மோடி!: செய்திகள்: சிலவரிகளில் | 15.05.2024

ராஜஸ்தான் பேட்டிங்: முதலிடத்துக்கு முன்னேறுமா?

வெள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து: அவசரகால கதவை உடைத்து மீட்கப்பட்ட பயணிகள்!

SCROLL FOR NEXT