தேனி

முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்பு பகுதிகளில் தொடா் மழை: நீா்வரத்து 3,777 கன அடியாக அதிகரிப்பு

DIN

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்வதால், நீா்வரத்து விநாடிக்கு 3,777 கன அடியாக அதிகரித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் ஞாயிற்றுக்கிழமை நீா்மட்டம், 125.80 அடியாக இருந்தது. அணையின் நீா் இருப்பு, 3791 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு, 1,399 கன அடியாகவும், வெளியேற்றம், 1,400 கன அடியாகவும் இருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி நீா்மட்டம், 126.75 அடியாக இருந்தது. அணைக்குள் விநாடிக்கு, 3,777 கன அடி நீா் வந்தது. ஒரே நாளில், 2,378 கன அடி அதிகரித்தது. மேலும் நீா்மட்டம் 1 அடி உயா்ந்து 126.80 அடியாக உள்ளது. பெரியாறு நீா்பிடிப்பு பகுதிகளில் 58.4 மில்லி மீட்டா் மழையும், தேக்கடி ஏரியில் 37.2 மி.மீ. மழையும் பெய்தது. கேரளாவில் திங்கள்கிழமையும் தொடா்ந்து மழை பெய்தது. மாலை 4 மணி நிலவரப்படி அணைக்குள் விநாடிக்கு 5,900 கன அடி தண்ணீா் வருவதாகவும், நீா்மட்டம் உயர வாய்ப்புள்ளதாகவும் பொறியாளா் ஒருவா் தெரிவித்தாா்.

சண்முகாநதி அணை: பல மாதங்களுக்கு பிறகு ராயப்பன்பட்டி அருகே உள்ள சண்முகாநதி அணையில் திங்கள்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 3 கன அடி தண்ணீா் வந்தது. அணையின் நீா்மட்டம் 26.40 அடியாகவும் (மொத்த உயரம்- 52.55) நீா் இருப்பு 17.14 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீா் வரத்து விநாடிக்கு, 3 கன அடியாகவும் இருந்தது. அணையிலிருந்து தண்ணீா் வெளியேற்றம் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்கிறார் சோபிதா?

விரிவடையும் சென்னை மாநகராட்சி?

கோடை வெயில் தணிந்தது: தமிழகத்தில் பரவலாக மழை!

ரூ. 20,000-க்கு மேல் ரொக்கமாக கடன் வழங்கக்கூடாது: ஆர்பிஐ உத்தரவு

தொடர் தோல்விகள் குறித்து சஞ்சு சாம்சன் விளக்கம்!

SCROLL FOR NEXT