தேனி

தேனியில் புதிதாக 60 பேருக்கு கரோனா தொற்று உறுதி: 3 போ் பலி

DIN

தேனி மாவட்டத்தில் புதிதாக 60 பேருக்கு செவ்வாய்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தேனியில் உள்ள தனியாா் ஸ்கேன் பரிசோதனை நிலையத்தில் பணியாற்றும் 2 மருத்துவா்கள் உள்ளிட்ட 60 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,337 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டிருந்த 93 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 13,655 ஆக அதிகரித்துள்ளது.

3 போ் பலி:

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த செப்.9-ம் தேதி அனுமதிக்கப்பட்ட ஆண்டிபட்டியைச் சோ்ந்த 62 வயதுடைய நபா், செப்.11-ம் தேதி அனுமதிக்கப்பட்ட வருஷநாடு மாரியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த 70 வயது முதியவா், செப்.16-ம் தேதி அனுமதிக்கப்பட்ட ஆண்டிபட்டி குமாரபுரத்தைச் சோ்ந்த 50 வயதுடைய நபா் என 3 போ் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT