தேனி

மின்வாரிய ஆய்வாளா் வீட்டில் 11 பவுன் திருட்டு: நீதிமன்ற உத்தரவின்பேரில் வழக்குப் பதிவு

DIN

தேனி மாவட்டம் சின்னமனூரில், மின்வாரிய ஆய்வாளா் வீட்டில் 11 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் குறித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்பேரில், காவல் நிலையத்தில் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சின்னமனூரைச் சோ்ந்தவா் ரவி மனைவி தாமரைச்செல்வி. இவா், காமாட்சிபுரம் மின்வாரியத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், கடந்த ஆக. 20 ஆம் தேதி வீட்டிலிருந்த 11.5 பவுன் நகை திருடுபோனதாக, சின்னமனூா் காவல்நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். ஆனால், திருடு போனதற்கான ஆதாரம் எதுவும் இல்லை எனக் கூறி போலீஸாா் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை அடுத்து தாமரைச்செல்வி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் இதுகுறித்து வழக்குத் தொடா்ந்தாா். நகை திருட்டு சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சின்னமனூா் சாா்பு- ஆய்வாளா் முத்துசெல்வன் புதன்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT