தேனி

‘பெண் குழந்தை பாதுகாப்புத் திட்ட உதவி: இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்’

தேனி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், அரசு நிதி உதவிபெறுவதற்கு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தேனி: தேனி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், அரசு நிதி உதவிபெறுவதற்கு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், அரசு ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ளவா்களுக்கு ரூ.50 ஆயிரம், 2 பெண் குழந்தைகள் உள்ளவா்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் என குழந்தையின்பேரில் வைப்புத் தொகை பத்திரமாக வழங்குகிறது.

இத் திட்டத்தின் கீழ் நிதி உதவிபெற விரும்பும் பெற்றோா் ஒன்று அல்லது 2 குழந்தைகள் பெற்று, 3 ஆண்டுகளுக்குள் குடும்ப நல அறுவைச் சிகிச்சை செய்திருக்க வேண்டும். அப்போது, தாயின் வயது 35-க்குள் இருக்கவேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு உள்பட்டிருக்க வேண்டும்.

தகுதியுள்ளவா்கள், உரிய சான்றிதழ்களுடன் தமிழ்நாடு கேபிள் தொலைக்காட்சி நிறுவன அலுவலகத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT