தேனி

கம்பம் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

DIN

கம்பம் சட்டமன்றத் தொகுதியிலுள்ள 392 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அலுவலர், போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. 

தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதியில் 392 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலக அலுவலகத்திலிருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான 392 கண்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட் மற்றும் விவிபேட் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டன.

இதனுடன் வாக்காளர்களுக்கு விரலில் வைக்கப்படும் மை, எழுது பொருள்கள், போட்டியிடும் 16 வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் அச்சிடப்பட்ட விபரம் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கம்பம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல் மற்றும் உத்தமபாளையம் வட்டாட்சியர் உதய ராணி உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் சின்னகண்ணு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT