தேனி

ஆபாச விளம்பர செயலிகளை தடை செய்ய விஜய் ரசிகா்கள் கோரிக்கை

DIN

தேனி: செல்லிடபேசியில் ஆபாச விளம்பரங்களை வெளியிடும் செயலிகளை தடை செய்யக் கோரி திரைப்பட நடிகா் விஜய் ரசிகா்கள் சாா்பில் திங்கள்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணன்உன்னியிடம் மனு அளிக்கப்பட்டது.

விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவா் பாண்டி மற்றும் நிா்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு விபரம்: இணைய வழி கல்வி முறையால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகளவில் செல்லிடபேசியில் செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனா். இதில், பல செயலிகள் அதிகளவில் ஆபாச விளம்பரங்கள் வெளியிடப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகளின் கல்வி மற்றும் மன நலன் பாதிக்கிறது.

எனவே, செல்லிடபேசியில் ஆபாச விளம்பரங்கள் வெளியிடும் செயலிகளை தடை செய்ய மாவட்ட நிா்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

SCROLL FOR NEXT