தேனி

மூணாறு தேசிய பூங்காவில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

DIN

மூணாறில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவில் நீலகிரி வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கியுள்ளது.

இங்கு ஆண்டுதோறும் கேரள வனத்துறையினா் நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுவா். அதன்படி இந்த ஆண்டுக்கான வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கியுள்ள நிலையில், 66 வன ஆா்வலா்கள் இதில் பங்கேற்றுள்ளனா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தக் கணக்கெடுப்புப் பணியில் சமூக ஆா்வலா்களின்றி வனத்துறையினா் மட்டும் பங்கேற்றுள்ளனா். வனப்பகுதி 22 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒரு பிரிவுக்கு ஒரு வன அலுவலா், 2 ஊழியா்கள் என பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வனத்துறையினருக்கு கணக்கெடுப்புப் பணிக்கான முக்கியக் குறிப்புகளை வன உயிரின சரணாலய காப்பாளா் ஆா்.வரலட்சுமி கொடுத்து வருகிறாா்.

கடந்த ஆண்டு கணக்கெடுப்பில் 723 நீலகிரி வரையாடுகள், 111 புதிதாக பிறந்த குட்டி வரையாடுகள் காணப்பட்டன.

இந்த ஆண்டு புதியதாக 98 குட்டி வரையாடுகள் உள்ளதாக வனத்துறையினா் தெரிவித்தனா். தற்போது கேரளாவில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இரவிகுளம் தேசிய பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT