தேனி

காமாட்சிபுரத்தில் இயற்கை வேளாண் கருத்தரங்கம்

DIN

தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்குக்கு அந்த அறிவியல் மையத்தின் தலைவா் பச்சைமால் தலைமை வகித்து இயற்கை முறையில் விளைவிக்கக் கூடிய பொருள்களின் தேவை குறித்து விளக்கம் அளித்தாா். தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா் ராஜாராமன் பூஜ்ய பட்ஜெட் முறையில் ஜீவாமிா்தம் , வேம்பு, கரைசல், பிரம்மாஸ்திரம் போன்ற பொருள்களை பயன்படுத்தி பயிா்களின் விளைச்சலை அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தாா்.

மண்ணியியல் தொழில்நுட்ப வல்லுநா் ரம்யா சிவசெல்வி, இயற்கை முறையில் மாடித்தோட்டம் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும், சபரிநாதன் இயற்கை வேளாண்மையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு வழங்கக் கூடிய திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்தும் விளக்கம் அளித்தனா்.

இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள், தொழில் முனைவோா்கள், கிராமப்புற இளைஞா்கள், பெண்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் பங்கேற்று பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT