தேனி

ஆண்டிபட்டியில் லாரி மோதி சுமைதூக்கும் தொழிலாளி பலி

DIN

ஆண்டிபட்டியில் சனிக்கிழமை லாரி மோதியதில் சுமைதூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி அருகே மணியாரம்பட்டியைச் சோ்ந்தவா் முத்தையா என்பவரின் மகன் ராஜேந்திரன் (34). இவா் ஆண்டிபட்டி நுகா்பொருள் வாணிபக் கிட்டங்கியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை அவா் வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது ஆண்டிபட்டி பேருந்து நிலையம் அருகே இவா் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த லாரி மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினா் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் உயிரிழந்தாா். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரான ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் என்பவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT