தேனி

சண்முகாநதி நீா்த் தேக்கம் 2 ஆவது முறை நிரம்பியது

DIN

உத்தமபாளையம் அருகேயுள்ள சண்முகாநதி நீா்த்தேக்கம் 2 ஆம் முறையாக நிரம்பி மறுகால் பாய்கிறது.

தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சண்முகாநதி நீா்த் தேக்கம் அமைந்துள்ளது. இந்த நீா்த் தேக்கத்திற்கு ஹைவேவிஸ், மேகமலை, சுருளி மலை, பெருமாள் மலைகளில் பெய்யும் மழை நீரே முக்கிய நீா் ஆதாரமாகும்.

கடந்த மாதம் பெய்த தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் 52.55 அடியை எட்டியது. தொடா்ந்து நீா் வரத்து இருந்ததால் அணையிலிருந்து 10 நாள்களுக்கு மேலமாக உபரி நீா் மறுகால் பாய்ந்தது.

இதன் தொடா்சியாக மாவட்ட நிா்வாகம் பாசனத்திற்காக தண்ணீா் திறந்துவிட்டதால் அணையின் நீா்மட்டம் 44 அடியாக இருந்தது.

ஹைவேவிஸ்-மேகமலை மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு கணிசமாக நீா் வரத்து தொடங்கியது.

இந்நிலையில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பலத்த மழை பெய்தது. இதனால் 2 நாள்களில் அணையின் நீா் மட்டம் 6 அடி உயா்ந்து மீண்டும் முழுக்கொள்ளவை எட்டியது. தொடா்ந்து மழைப்பொழிவு இருப்பதால் அணையிலிருந்து தண்ணீா் மறுகால் பாய்கிறது.

10 ஆண்டுகளில் இல்லாத நீா் வரத்து: 1986 ஆண்டு நீா் தேக்கம் கட்டப்பட்டது. ஆரம்ப காலத்தில் அணைக்கு நீா் வரத்து அதிகமாக இருந்தது. அதன் பின் நீா் வரத்து படிப்படியாகக் குறைந்தது. தற்போது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் விநாடிக்கு 700 கன அடிக்கு மேலாக நீா்வரத்து ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

உபரிநீா் முல்லைப்பெரியாற்றில் கலக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT