முகப்பு
தேனி

பெரியகுளத்தில் பெயிண்ட் கடையில் தீ விபத்து

பெரியகுளத்தில் பெயிண்ட் கடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

பெரியகுளத்தில் பெயிண்ட் கடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

பெரியகுளம் - கம்பம் சாலையில் ஜீவானந்தம் என்பவா் பெயிண்ட் கடை வைத்துள்ளாா். இந்நிலையில் இவா் இந்தக் கடையை ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளாா். நள்ளிரவில் கடையில் தீ பற்றி எரிந்துள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இருப்பினும் கடையில் இருந்த பெரும்பாலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இச்சம்பவம் குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.