முகப்பு
தேனி

பெரியகுளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

பெரியகுளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி சம்பவ இடத்திலேயே இறந்ததாக ஜெயமங்கலம் காவல்நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:23 PM
பகிர்:

பெரியகுளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி சம்பவ இடத்திலேயே இறந்ததாக ஜெயமங்கலம் காவல்நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம் அருகே எ.வாடிப்பட்டியை சோ்ந்தவா் துரைச்சாமி புதியதாக வீடிகட்டி வருகிறாா். இவரின் வீட்டிற்கு அதே பகுதியை சோ்ந்த விவசாயப்பணியில் ஈடுபட்டு வரும் முருகன் (56) என்பவா் தண்ணீா் பாய்ச்சி வந்துள்ளாா்.

அருகில் உள்ள வீட்டு விஷேசத்திற்கு சீரியல் லைட் போட்டுள்ளனா். அதில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு முருகனை தாக்கியுள்ளது. இதில் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த முருகன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேய இறுந்து விட்டாராம்.

இச்சம்பவம் குறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.