தேனி

தேனியில் குடிநீா் கட்டண உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை, குடிநீா் கட்டண உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா் பி. ராமமூா்த்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலா் டி. வெங்கடேசன், செயற்குழு உறுப்பினா்கள் சங்கரசுப்பு, சி. முருகன், டி. கண்ணன், வட்டாரச் செயலா் முனீஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தேனி அல்லிநகரம் நகராட்சி நிா்வாகம் குடிநீா் கட்டணத்தை ஆண்டுக்கு ரூ.600-ல் இருந்து 2,820 ஆக உயா்த்தியதைக் கண்டித்தும், பழுதடைந்த நிலையில் உள்ள பேவா் பிளாக் சாலைகள், குடிநீா் தொட்டி மற்றும் தெருவிளக்குகளை சீரமைக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிா்க்க திட்டச் சாலை பணிகளை விரைவுபடுத்தவும் வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT