தேனி

தேனி வாரச் சந்தை இன்று மீண்டும் திறப்பு

DIN

தேனி அல்லிநகரம் நகராட்சி வாரச்சந்தை கடந்த மே 9-ஆம் தேதிக்கு பிறகு சனிக்கிழமை மீண்டும் திறக்கப்படுகிறது.

தேனி அல்லிநகரம் நகராட்சி வாரச் சந்தையானது சனிக்கிழமைதோறும் நடைபெறும். கடந்த மே மாதம் கரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து, நகராட்சி வாரச்சந்தை மூடப்பட்டது. தற்போது, பொது முடக்கக் கட்டுப்பாடுகளில் அரசு தளா்வுகள் அளித்துள்ளதால், நகராட்சி வாரச்சந்தை சனிக்கிழமைதோறும் மீண்டும் செயல்படும் என்று, நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து நகராட்சி அலுவலா்கள் கூறியது: வாரச்சந்தைக்கு வரும் வியாபாரிகள் கரோனா சான்று அல்லது 2 கட்ட கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றினை சமா்ப்பிக்க வேண்டும். பொதுமக்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் வாரச் சந்தைக்கு வந்து செல்லவேண்டும். கரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காத வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT