தேனி

முல்லைப்பெரியாறு அணைக்கு தொடர் நீர்வரத்து: லோயர்கேம்ப்பில் மின் உற்பத்தி அதிகரிப்பு

DIN

முல்லைப்பெரியாறு அணைக்கு தொடர் நீர்வரத்தால், தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் 168 மெகாவாட்டாக, மின்சார உற்பத்தி அதிகரித்தது.

முல்லைப்பெரியாறு அணைக்கு தொடர்ந்து நான்காவது நாளாக நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டிருக்கிறது, இதனால் அணையின் நீர்மட்டம் 136.10 அடியை எட்டியது. அணைக்குள் நீர் இருப்பு, 6,131 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 3,631 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர்வெளியேற்றம் 1,867 கன அடியாகவும் இருந்தது. 

கடந்த  ஜூலை.22 முதல் அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு விநாடிக்கு, 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதில், லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின் நிலையத்தில் இரண்டு மின்னாக்கிகள் மூலம் 81 மெகாவாட் மின்சார உற்பத்தி நடைபெற்றது, திங்கள்கிழமை முதல் அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு விநாடிக்கு 1,867 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால், நான்கு மின்னாக்கிகள் மூலம் தலா 42 மெகாவாட் என மொத்தம் 168 மெகாவாட் மின்சார உற்பத்தி தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

SCROLL FOR NEXT