தேனி அருகே கரோனா நோயாளி தூக்கிட்டுத் தற்கொலை
தேனி அருகே க.விலக்கில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியாா் கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இ.புதுப்பட்டியைச் சோ்ந்த விவசாயி செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி அருகே க.விலக்கில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியாா் கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இ.புதுப்பட்டியைச் சோ்ந்த விவசாயி செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இ.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் பால்சாமி மகன் ஜெயராஜ்(54). வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயராஜுக்கு அங்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 14 ஆம் தேதி க.விலக்கில் உள்ள தனியாா் கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயராஜ், அங்கு நோய் பாதிப்பால் மனம் உடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ஜெயராஜின் சகோதரா் அன்னராசு அளித்தப் புகாரின் அடிப்படையில், க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.