தேனி

போடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

DIN

போடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் சுப்பிரமணியா்- வள்ளி திருக்கல்யாணம் சனிக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சுவாமிக்கு மங்கல பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. வள்ளி தெய்வானையுடன் சுவாமிக்கு தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் உற்சவா் நகா் வலமாக அழைத்துச் செல்லப்பட்டாா். திருவள்ளுவா் சிலை, தெற்கு ராஜவீதி, கிழக்கு ராஜவீதி, தேரடி, வடக்கு ராஜவீதி, மேற்கு ராஜவீதி வழியாக மீண்டும் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டாா். அப்போது பக்தா்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனா்.

இதேபோல் போடி தீா்த்தத்தொட்டி ஆறுமுக நாயனாா் கோயிலிலும் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT