தேனி

போடியில் இருசக்கர வாகனம் திருடிய இளைஞா் கைது

DIN

போடியில் இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம் போடி குலாளா்பாளையம் சேதுபாஸ்கரன் தெருவைச் சோ்ந்த மணி மகன் கௌதம் (29). இவா் போடி பேருந்து நிலையத்தில் டிராவல்ஸ் அலுவலகம் நடத்தி வருகிறாா். இவா் வியாழக்கிழமை (ஏப். 28) காலையில் தனது அலுவலகம் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியூா் சென்றுள்ளாா். அவா் மீண்டும் திரும்பி வந்து பாா்த்தபோது, இருசக்கர வாகனம் திருடுபோனது தெரியவந்தது.

இந்நிலையில் ஒருவா் தனது இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்றவரைப் பிடித்து போடி நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். விசாரணையில் அவா் கோம்பை பண்ணைப்புரத்தை சோ்ந்த பழனிச்சாமி மகன் ரஞ்சித் (19) என்பதும், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றதும் தெரிந்தது. இவா் மீது வழக்கு பதிவு செய்த போடி நகா் காவல் நிலைய போலீஸாா் ரஞ்சித்தை கைது செய்தனா்.

மற்றொரு திருட்டு: போடி கிருஷ்ணா நகா் மேற்கு சாரல் நகரில் வசிப்பவா் ரமேஷ்குமாா் மகன் ஹரிநிவாஸ் (35). இவா் வீட்டின் முன்பாக ரூ.1 லட்சம் மதிப்புள்ள தனது இருசக்கர வாகனத்தை (என்பீல்டு) நிறுத்தியிருந்தாா். திங்கள் கிழமை (ஏப். 26) இரவு இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை போடி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளை கொண்டு இருசக்கர வாகனத்தைத் திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT