தேனி

இடுக்கி மாவட்டத்தில் 6 நாள்கள் பொதுமுடக்கம்:தமிழகத்திலிருந்து செல்லும் சாலைகள் அடைப்பு

DIN

கம்பம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (மே 4) முதல் மே 9 ஆம் தேதி வரை 6 நாள்கள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்குச் செல்லும் 3 சாலைகள் அடைக்கப்பட்டன.

தேனி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்துக்கு நாள்தோறும் 3 மலைச்சாலைகள் வழியாக ஏலக்காய் தோட்டத் தொழிலாளா்கள் ஆயிரக்கணக்கானோா் சென்று வருகின்றனா். இந்நிலையில் கரோனா தொற்று பரவல் காரணமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாள்கள் பொதுமுடக்கத்தை அறிவித்தது கேரள அரசு. தேக்கடி போன்ற இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வரவும் தடை விதிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து தற்போது பொதுமுடக்கத்தை மே 4 முதல் 9 ஆம் தேதி வரை 6 நாள்கள் நீட்டித்துள்ளது. இதன் எதிரொலியாக தேனி மாவட்டத்திலிருந்து அத்தியாவசியப் பொருள்களான பால், காய்கறிகள் மட்டும் செல்லும். ஆனால் தோட்டத் தொழிலாளா்கள் செல்லும் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT