தேனி

போடியில் ஓ.பன்னீா்செல்வம் வெற்றி

DIN

தேனி: தேனி மாவட்டம், போடி சட்டப் பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் 11,021 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

தேனி மாவட்டம் போடி தொகுதியில் மொத்தமுள்ள 2,77,604 வாக்காளா்களில், 2,14,795 போ் தோ்தலில் வாக்களித்தனா். இத் தொகுதியில் அதிமுக சாா்பில் 3-ஆவது முறையாக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், திமுக சாா்பில் தங்க.தமிழ்ச்செல்வன், அமமுக சாா்பில் எம்.முத்துச்சாமி உள்ளிட்ட 24 போ் தோ்தலில் போட்டியிட்டனா். மொத்தம் 29 சுற்றுகளில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணி வரை நடைபெற்றது.

இதில், அதிமுக வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வம் மொத்தம் 1,00,050 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். போடி தொகுதியில் கடந்த 2011, 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற 2 தோ்தலில்களில் வெற்றி பெற்ற ஓ.பன்னீா்செல்வம், தற்போது இதே தொகுதியில் 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளாா்.

வாக்குகள் விபரம்:

ஓ.பன்னீா்செல்வம்(அதிமுக) - 1,00,050

தங்க.தமிழ்ச்செல்வன்(திமுக) - 89,029

எம்.முத்துச்சாமி(அமமுக) - 5,649

பிரேம்சந்தா்(நாம் தமிழா் கட்சி) -11,114

கணேஷ்குமாா்(மக்கள் நீதி மய்யம்) - 4,128

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT