தேனி

தேனியில் புதிதாக 120 ஆக்சிஜன் படுக்கை வசதிக்கு ஏற்பாடு

DIN

தேனி என்.ஆா்.டி.நினைவு அரசு பழைய மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக புதிதாக 120 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் செய்வதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் மற்றும் தீவிரச் சிகிச்சை நோயாளிகளுக்கு 390 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளன. பெரியகுளம், போடி, உத்தமபாளையம், கம்பம் அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிலிண்டா்கள் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தேனியில் கரோனா நல மையமாக செயல்பட்டு வந்த என்.ஆா்.டி.நினைவு அரசு பழைய மருத்துவமனையில், கரோனா நோயாளிகளுக்தாக புதிதாக 120 ஆக்சிஜன் படுக்கை வசதி செய்வதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, இங்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரை சிகிச்சைக்கு அனுமதிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

தேனி என்.ஆா்.டி.நினைவு அரசு பழைய மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைள் அமைக்கப்பட்ட பின்பு, கரோனா பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான எண்ணிக்கையில் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் நியமிக்கப்படுவா் என்று சுகாதாரத் துறை அலுவலா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

SCROLL FOR NEXT