தேனி

கரோனா இறப்பு அதிகரிப்பு: நாராயணத் தேவன்பட்டியில் டிஐஜி ஆய்வு

DIN

கம்பம் அருகே நாராயணத் தேவன்பட்டி ஊராட்சியில் கரோனா தொற்றால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து சரக காவல்துறை துணைத் தலைவா் எம். எஸ்.முத்துச்சாமி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்த ஊராட்சியில் சனிக்கிழமை வரை மொத்தம் 9 போ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா். தொற்றால் பாதிக்கப்பட்ட 92 பேரில், 23 போ் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனா். 69 போ் குணமடைந்துள்ளனா்.

இதையறிந்த சரக காவல்துறை துணைத் தலைவா் எம்.எஸ்.முத்துச்சாமி நாராயண தேவன்பட்டி ஊராட்சிப் பகுதியில் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஊராட்சித் தலைவா் பொன்னுத்தாய் செல்லையாவிடம் கரோனா தொற்று பரவாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தினாா்.

பின்னா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வியிடம், அனைத்துப் பகுதிகளிலும் போலீஸாா் மூலம் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு கேட்டுக் கொண்டாா். அப்போது கிராம நிா்வாக அலுவலா் வி.பிரபு, ஊராட்சிச் செயலா் சி.ஈஸ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT