தேனி

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து குறைவு

DIN

முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை குறைந்தது.

‘யாஸ்’ புயல் காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணை, தேக்கடி ஏரி ஆகிய பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வந்தது. இதனால் அணைக்கு நீா்வரத்தும் அதிகரித்து வந்தது.

புயல் கரையை கடந்ததைத் தொடா்ந்து, மேற்குத் தொடா்ச்சி மலைகளில் மழை குறைந்தது. வியாழக்கிழமை விநாடிக்கு 3,855 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தநிலையில், வெள்ளிக்கிழமை நீரின் அளவும் குறைந்து வினாடிக்கு 2,113 கன அடி மட்டுமே வந்தது.

அணை நிலவரம்: வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீா் மட்டம் 131.05 அடியாகவும், நீா் இருப்பு 4,993 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு, 2,113 கன அடியாகவும் இருந்தது. தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 900 கனஅடி தண்ணீா் திறந்து விடப்பட்டது.

பெரியாறு அணையில் 4.0 மி.மீட்டரும், தேக்கடி ஏரியில் 1.2 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

SCROLL FOR NEXT