முல்லைப்பெரியாறு அணையில் மழை: ஒரேநாளில் 1,358 கனஅடி நீர் வரத்து அதிகரிப்பு
முல்லை்பபெரியாறு அணைப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்ததால் ஒரே நாளில் நீர்வரத்து 1,358 கனஅடி அதிகரித்து திங்கள்கிழமை 2,414 கன அடியாக அணைக்குள் வந்தது.
தேனிமுல்லைப்பெரியாறு அணையில் மழை: ஒரேநாளில் 1,358 கனஅடி நீர் வரத்து அதிகரிப்பு
முல்லை்பபெரியாறு அணைப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்ததால் ஒரே நாளில் நீர்வரத்து 1,358 கனஅடி அதிகரித்து திங்கள்கிழமை 2,414 கன அடியாக அணைக்குள் வந்தது.
முல்லை்பபெரியாறு அணைப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்ததால் ஒரே நாளில் நீர்வரத்து 1,358 கனஅடி அதிகரித்து திங்கள்கிழமை 2,414 கன அடியாக அணைக்குள் வந்தது.
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே அதன் எதிரொலியாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ஹைரேஞ்ச் பகுதி மற்றும் முல்லைப்பெரியாறு அணைப்பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை பெரியாறு அணைப்பகுதியில் 3.6 மில்லி மீட்டர், தேக்கடி ஏரியில் 3.6 மி.மீ., மழை பெய்த நிலையில் அணைக்குள் நீர்வரத்து விநாடிக்கு 1,056 கன அடி வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்ததால் திங்கள்கிழமை பெரியாறு அணையில் 25.6 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 9 மி.மீ., மழையும் பெய்தது.
இதனால் அணைக்குள் விநாடிக்கு 2,414 கன அடி தண்ணீர் வந்தது. ஒரே நாளில் 1,358 கன அடி தண்ணீர் அணைக்குள் அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. அணையின் நீர்மட்டம் 127.75 அடி உயரமாகவும், (மொத்த உயரம் 142), நீர் இருப்பு 4,212 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 2,414 கன அடியாகவும், அணையிலிருந்து நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1,300 கன அடியாகவும் இருந்தது.
முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு கடந்த ஆக.23 முதல் (அக்.4 ) தற்போது வரை விநாடிக்கு 1,300 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் உள்ள நான்கு மின்னாக்கிகளில் மூன்று மின்னாக்கிகளில் தலா 42,42,33 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி, 42 நாள்களாக தொடர்ந்து நடைபெறுகிறது.