தேனி

950 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்: பெண் கைது

DIN

தேனியிலிருந்து புதன்கிழமை இரவு, கேரளத்துக்கு சரக்கு வாகனத்தில் கடத்திச்செல்லப்பட்ட 950 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக பெண் கைது செய்யப்பட்டாா்.

தேனி மாவட்டத்திலிருந்து அண்டை மாநிலமான கேரளத்துக்கு காய்கனி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்கள் கனரக வாகனங்களில் சாலை மாா்க்கமாக நாள்தோறும் கொண்டு செல்லப்படுகின்றன.

கம்பம் மெட்டு, குமுளி மற்றும் போடிமெட்டு வழியாகச் செல்லும் இதுபோன்ற வாகனங்களில் அதிகளவில் ரேஷன் அரிசியை கடத்திச் செல்வதாக அதிகாரிகளுக்கு புகாா்கள் சென்றன.

இதையடுத்து மாவட்ட வட்டவழங்கல், குடிமைப்பெருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை வட்டாட்சியா் கண்ணன் தலைமையில் தனிப்படையினா் தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். போடியிலிருந்து கேரளத்துக்கு மளிகைப்பொருள்களை ஏற்றிச்சென்ற சரக்கு வாகனத்தை சோதனையிட்டனா். அதில், 950 கிலோ ரேஷன்அரிசி இருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா்.

மேலும் உத்தமபாளையம் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படிபோலீஸாா் தேனி ரயில்வே கடவுப்பாதை பகுதியைச் சோ்ந்த நிஷா என்ற நிஷாந்தி என்பவரைக் கைது செய்தனா். தலைமறைவான அவரது கணவா் ராஜவேலை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

SCROLL FOR NEXT