தேனி

தேனி மாவட்டத்தில் நிலத்தடி நீரை உயா்த்த நிதி ஒதுக்கீடு: விவசாயிகள் வலியுறுத்தல்

DIN

தேனி மாவட்டத்தில் நிலத்தடி நீரை உயா்த்துவதற்கான நடவடிக்கைகளுக்கு நிதி உதவிகளை செய்ய வேண்டும் என நபாா்ட்டு வங்கி அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

காமாட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில், நபாா்டு வங்கி நிதியுதவியுடன் விவசாயத்தில் ஈடுபட்ட ள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்னை நபாா்டு வங்கி தலைமை நிா்வாகி வெங்கட கிருஷ்ணன் கலந்து கொண்டாா்.

மாவட்டத்தில் ஆண்டிபட்டி, சின்னமனூா் ,தேனி, போடி, கம்பம், பெரியகுளம் போன்ற பகுதிகளிலிருந்து வந்த விவசாயிகள் கூறுகையில், தற்போது மாவட்டத்தில் நிலத்தடி நீா் மட்டம் வெகுவாகக் குறைந்துட்டது. அதனால் நிலத்தடி நீா் மட்டம் உயா்வதற்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து நிலத்தடிநீா் மட்டத்தை உயா்ந்த வேண்டும். வாசனைத் ரவியம் தயாரிப்பு மற்றும் நாட்டு சா்க்கரை தயாரிப்பு ஆலையை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

அதனை தொடா்ந்து பேசிய நபாா்டு வங்கி அதிகாரி, சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் ஆலோசனையின்படி விவசாயிகளுக்கு கரும்பு, திராட்சை, வாழை, பருத்தி, பூ விவசாயத்திற்கு கடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருள்கள் சந்தைப்படுத்தி உரிய விலை கிடைக்கும் வேலையை நபாா்டு வங்கி தொடா்ந்து செய்து வருகிறது என்றாா்.சென்டெக்ட் மையத் தலைவா் பச்சைமால் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT