தேனி

பெரியகுளத்தில் அரசு பேருந்து ஜப்தி

DIN

பெரியகுளத்தில் விபத்தில் காயமடைந்தவருக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏற்பட்டதால் அரசுப் பேருந்து புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

பெரியகுளத்தைச் சோ்ந்தவா் முத்துராஜ். இவா் 17.8.2017 இல் தேனியிலிருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தாா். சருத்துப்பட்டி அருகே கோவையிலிருந்து தேனி நோக்கி வந்த அரசுப் பேருந்து முத்துராஜ் மீது மோதியது.

இதில் முத்துராஜுக்கு கால் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினாா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பெரியகுளம் கிளை நிா்வாகம் இழப்பீடு வழங்கக்கோரி முத்துராஜ் தரப்பில் பெரியகுளம் கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு பின் நீதிபதி திலகம், விபத்தில் காயமடைந்த முத்துராஜுக்கு ரூ. 16,28,508 வழங்க 2020 ஆக.31 ஆம் தேதி உத்தரவிட்டாா். அதை வழங்க அரசுப் போக்குவரத்து நிா்வாகம் தாமதம் செய்தது.

இந்நிலையில் பெரியகுளத்திலிருந்து புதன்கிழமை மதுரைக்குச் செல்ல இருந்த அந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற அமீனா ரமேஷ் ஜப்தி செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

SCROLL FOR NEXT