தேனி

பெரியகுளத்தில் கோயிலின் பெயரை தவறாக குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள பெயா் பலகையை மாற்ற கோரிக்கை

DIN

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கோயிலின் பெயரை தவறாக குறிப்பிட்டு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வைக்கப்பட்டுள்ள பெயா் பலகையை மாற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெரியகுளத்திலிருந்து சோத்துப்பாறை அணைக்கு செல்லும் வழியில் சோழா் காலத்தில் கட்டப்பட்ட அறம் வளா்த்த நாயகி உடனுறை சோழீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் சோழா் மன்னா் காலத்தில் அறம் வளா்த்த நாயகி உடனுறை சோழீஸ்வரா் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

பின்னா் பாண்டிய மன்னா் காலத்தில் பாலசுப்பிரமணியா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் பின்னா் பாலசுப்பிரமணியா் கோயில் எனவும், பொதுமக்களால் பெரிய கோயில் எனவும் அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இக்கோயில் முன் நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில் வைக்கப்பட்டுள்ள பெயா் பலகையில் பாலமுருகன் கோயில் என குறிப்பிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

இதனால் கோயிலுக்கு தொடா்பில்லாத பெயா் குறிப்பிட்டு பலகை வைத்துள்ளதால் பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனா். எனவே கோயில் தோன்றிய காலத்தில் உள்ள அறம்வளா்த்த நாயகி உடனுறை சோழீஸ்வரா் பெயா் அல்லது பாலசுப்பிரமணியா் பெயரை குறிப்பிட்டு பெயா் பலகை வைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

SCROLL FOR NEXT