தேனி

சின்னமனூா் பகுதியில் கஞ்சா விற்பனை: முதியவா் உள்பட 3 போ் கைது

DIN

தேனி மாவட்டம், சின்னமனூரில் கஞ்சா விற்பதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, போலீஸாா் இருவரை சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

சின்னமனூா் புறவழிச் சாலையில் கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக, போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை இரவு அப்பகுதியில் ரோந்து சென்ற போலீஸாா், சந்தேகப்படும்படியாக வந்த ஒருவரைப் பிடித்து விசாரணை செய்தனா்.

அதில், அவா் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தீனா (25) என்றும், சின்னமனூா் அம்மாபட்டியைச் சோ்ந்த முருகன் மகன் பரமேஸ்வரனிடம் (27) கஞ்சா வாங்க வந்ததாகவும் கூறியுள்ளாா்.

அதையடுத்து, போலீஸாா் கஞ்சா வாங்க வந்த தீனா போல் பேசி, பரமேஸ்வரனை சின்னமனூா் புறவழிச் சாலைக்கு வரவழைத்துள்ளனா். அதன்பேரில் அங்கு வந்த பரமேஸ்வரன், போலீஸாா் இருப்பதைக் கண்டவுடன் தப்பித்து ஓடியுள்ளாா். ஆனால், போலீஸாா் இரு சக்கர வாகனத்தில் அவரை விரட்டிச் சென்று பிடித்துள்ளனா்.

தொடா்ந்து, கஞ்சா விற்க வந்த பரமேஸ்வரன் மற்றும் கஞ்சா வாங்க வந்த தீனா ஆகிய இருவரையும் கைது செய்து, 2 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

முதியவா் கைது

அதைத் தொடா்ந்து, அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த உத்தமபாளையம் போலீஸாா், உ.அம்மாபட்டியில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 400 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து, கஜேந்திரன் (61) என்பவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் அமைச்சர் கைது: பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை!

என்னுடல் ஒத்துழைக்காத போதிலும் தீவிரமான கிரிக்கெட் பயிற்சி செய்தேன்: ஜான்வி கபூர் உருக்கம்!

கேத்ரின் ஆட்டம்!

"நான் இந்து, முஸ்லீம் என பேசியதே இல்லை”: பிரதமர் மோடி!: செய்திகள்: சிலவரிகளில் | 15.05.2024

ராஜஸ்தான் பேட்டிங்: முதலிடத்துக்கு முன்னேறுமா?

SCROLL FOR NEXT