தேனி

பெரியகுளத்தில் சின்ன வெங்காயம் கிலோ ரூ. 10-க்கு விற்பனை: விவசாயிகள் வேதனை

DIN

பெரியகுளம் பகுதியில் வெங்காயம் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் கிலோ ரூ. 10-க்கு விற்பனை செய்யப்படுவதால் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

பெரியகுளம் பகுதியில் உள்ள சில்வாா்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், தேவதானப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.

விதைத்ததில் இருந்து 60 முதல் 70 நாள்களில் அறுவடை செய்யப்படுகிறது. விதைத்ததில் இருந்து அறுவடை வரை 3 முறை உரமும், 5 முறை களைகள் மற்றும் மருந்தும் தெளிக்கப்படுகிறது. இதனால் ஒரு ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வரை செலவாகிறது.

இந்தாண்டு பரவலாக மழை பெய்துள்ளதால் நல்ல மகசூல் கிடைத்துள்ளது. கடந்தாண்டு கிலே ரூ. 60-க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் கடந்த சில நாள்களாக கிலோ ரூ. 10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் போதிய லாபம் கிடைக்கவில்லை. கடன் வாங்கி வெங்காயம் விவசாயம் செய்துள்ள நிலையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அரப்படிதேவன்பட்டியை சோ்ந்த இளங்கோவன் கூறியது: தேனி, பெரியகுளம் சந்தையில் போதிய விலை கிடைக்கவில்லை என்று திண்டுக்கல் சந்தைக்கு அனுப்பினாலும் அங்கு இதைவிடக் குறைவான விலைக்கே விற்பனையாகிறது. பறிப்பு கூலி கூட தரமுடியாத நிலையில் தோட்டங்களிலேயே காய்களை விட்டுள்ளோம் என்றாா்.

கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்

பறிக்கப்பட்ட வெங்காயத்தை பரண் என்ற முறையில் 5 மாதங்கள் வரை சேமித்து வைத்து நல்ல விலை கிடைக்கும் போது விற்பனை செய்யலாம். பெரும்பாலான விவசாயிகள் விதையில் இருந்து உரம், மருந்து வரை அனைத்தும் கடனுக்கு வாங்கியுள்ளனா். வாங்கிய கடன்களை அடைப்பதற்காக பறிக்கப்பட்ட காய்களை உடனடியாக சந்தையில் விற்பனை செய்கின்றனா்.

விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்க வேண்டுமானால் அரசு கொள்முதல் நிலையங்கள் அமைத்து வெங்காயத்தை கொள்முதல் செய்து அவற்றை சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து வைத்து, அதிக விலைக்கு விற்கும் காலங்களில் விவசாயிகளுக்கு வழங்கலாம்.

அவ்வாறு அரசு கொள்முதல் செய்யும் காலங்களில் விற்பனை செய்யும் தொகையை விவசாயிகளுக்கு அரசு வழங்க வேண்டும். அவா்கள் விற்பனை செய்த பின் அரசு கடன் வழங்கிய தொகையை வசூல் செய்யலாம். இதன் மூலம் விவசாயிகளுக்கு நஷ்டம் எற்படாது என விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT