தேனி

தேனி மாவட்டத்தில் 6.31 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN

தேனி: தேனி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 6 லட்சத்து 31 ஆயிரத்து 88 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் கூறினாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியது: தேனி மாவட்டத்திற்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவும், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் பொதுமக்களுக்கு தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை முதல் தவணையாக 4 லட்சத்து 78 ஆயிரத்து 882 போ், 2 ஆம் தவணையாக ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 206 போ் என மொத்தம் 6 லட்சத்து 31 ஆயிரத்து 88 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 12 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளில் இதுவரை 9,419 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 7,317 கா்ப்பிணிகள், 6,278 பாலூட்டும் தாய்மாா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் வாக்குப் பதிவு இயந்திர அறையின் சிசிடிவி செயலிழப்பு: நீலகிரி ஆட்சியர் விளக்கம்

உயிருக்குப் போராடிய குழந்தை.. காப்பாற்றிய குடியிருப்புவாசிகள்!

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

SCROLL FOR NEXT