தேனி

உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

DIN

உத்தமபாளையம்; தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அதிமுக கட்சியை சேர்ந்த ஜான்சி வாஞ்சிநாதன் பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா அவர்களிடம் சில நாட்கள் முன் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி  கோட்டாட்சியர் கௌசல்யா தலைமையில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் 9 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

அதிமுக - திமுக கட்சியினரிடையே தள்ளுமுள்ளு: உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் குவிந்த அதிமுக- திமுகவினரிடையே திடீர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

உத்தமபாளையம் உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையிலான காவலர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்து கொண்ட அதிமுக-5 திமுக-3 அமமுக  -1ஆகிய கட்சியைச் சேர்ந்த 9 உறுப்பினர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

SCROLL FOR NEXT