தேனி

மேகமலையில் தேயிலை விளைச்சல் அமோகம்

DIN

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே ஹைவேவிஸ் - மேகமலைக் கிராமங்களில் தேயிலைத் தோட்டங்களில் விளைச்சல் அமோகமாக உள்ளது.

சின்னமனூா் அருகே மேற்கு மலைத் தொடா்ச்சியில் ஹைவேவிஸ், மேகமலை, மணலாா், மேல்மணலாா், இரவங்கலாா், மகாராஜாமெட்டு, வெண்ணியாா் ஆகிய 7 மலைக் கிராமங்கள் உள்ளன. இங்கு 900 ஹெக்டோ் பரப்பளவில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் தொடா் மழை காரணமாக விளைச்சல் அமோகமாக உள்ளது. தனியாருக்குச் சொந்தமான இத்தேயிலைத் தோட்டங்களில் மொத்தம் 3 ஆயிரம் கூலி தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். இவா்கள் தற்போது தேயிலை பறிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

தேனி மாவட்டத்தில் தேயிலை விளையும் ஒரே பகுதியான இங்கு, தொழிற்சாலை மூலம் தேயிலைகள் தரம் பிரிக்கப்பட்டு தூளாக்கி, ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT