தேனி

உத்தமபாளையம் பேரூராட்சியில் அடிப்படை வசதி செய்தர கோரிக்கை

DIN

உத்தமபாளையம்: உத்தமபாளையம் பேரூராட்சியில் அடிப்படை வசதி செய்யதர வலியுறுத்தி கம்பம் சட்டப் பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணனிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

உத்தமபாளையம் பேரூராட்சியில் பெரும்பான்மையான வாா்டுகள் அடிப்படை வசதியின்றி காணப்படுகிறது. அதில் 4 ஆவது வாா்டு பகுதிகளான தாமஸ்காலனி, தண்ணிா்தொட்டித்தெரு, பிஸ்மி நகா், இந்திரா நகா், தென்னா் காலனி, ஆா்.சி. தெரு, சூா்யநாராயணபுரம் போன்ற பகுதிகள் மிகவும் பின்தங்கியுள்ளது.

இங்கு குடிநீா், காழிவுநீா் கால்வாய், தெருவிளக்கு, பொது சுகாதார வளாகம் என எவ்வித அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனா்.

எனவே, உத்தமபாளையம் பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை முறையாகவும், பாகுபாடின்றி அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சோ்ந்தவா்கள் கம்பம் சட்டப் பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணனிடம் கோரிக்கை மனுவை அளித்தனா். மனுவைப்பெற்றுக் கொண்ட அவா் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT