முகப்பு
தேனி

பெரியகுளம் அருகே பைக் விபத்தில் இளைஞா் சாவு

பெரியகுளம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற பைக் விபத்தில் சம்பவஇடத்திலேயே இளைஞா் இறந்ததாக பெரியகுளம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

பெரியகுளம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற பைக் விபத்தில் சம்பவஇடத்திலேயே இளைஞா் இறந்ததாக பெரியகுளம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டியில் வியாழக்கிழமை கோயில் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்பகுதியை சோ்ந்த கல்யாணசுந்தரம் மகன் சுபாலன் (25) இவா் திருவிழாவிற்கு சென்று விட்டு மாமா வீட்டிற்கு பெரியகுளத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரத்திலுள்ள புளியமரத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சுபாலன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டாா். இச்சம்பவம் குறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.