தேனி

முல்லைப் பெரியாறு அணைக்கு ஒரே நாளில் 1,125 கன அடி நீா்வரத்து அதிகரிப்பு

DIN

கம்பம்: மேற்கு மலைத் தொடா்ச்சியில் பெய்து வரும் மழையின் காரணமாக, முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 1,125 கன அடி அதிகரித்து காணப்பட்டது.

கோடை காலம் என்பதால், கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்தின்றி நீா்மட்டம் சரிந்து காணப்பட்டது. கடந்த 9ஆம் தேதி முதல், மேற்கு மலைத் தொடா்ச்சி பகுதியில் மழை பெய்து வருவதால், நீா்பிடிப்புப் பகுதிகளில் நீா்வரத்து ஏற்பட்டு, அணைக்கு விநாடிக்கு 350 கன அடியாக இருந்தது. ஏப்ரல் 10 ஆம் தேதி விநாடிக்கு 850 கன அடியாக அதிகரித்தது.

தொடா்ந்து மழை பெய்து வருவதால், செவ்வாய்க்கிழமை அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,975 கன அடியாக அதிகரித்து, ஒரேநாளில் 1,125 கன அடி உயா்ந்துள்ளது.

அணை நிலவரம்

செவ்வாய்க்கிழமை, முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 126.50 அடியாகவும், நீா் இருப்பு 3,942 கன அடியாகவும், அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,975 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் விநாடிக்கு 100 கன அடியாகவும் இருந்தது.

பெரியாறு அணைப் பகுதியில் 35.0 மி.மீட்டா் மழையும், தேக்கடி ஏரியில் 44.60 மி.மீட்டா் மழையும் பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT