இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
பெரியகுளம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
பெரியகுளம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேவதானபட்டியைச் சோ்ந்த தங்கேஸ்வரன் (38). இவரது மனைவி சுபத்ரா (28). இவா்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனா். சுபத்திரா உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தாராம். தங்கேஸ்வரன் வியாழக்கிழமை போடிக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பி வந்துள்ளாா்.
அங்கு வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து, உள்ளே சென்று பாா்த்தபோது சுபத்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.