முகப்பு
தேனி

தேனியில் ரயில் பாதை சந்திப்பின் குறுக்கே மேம்பாலம்: கட்டுமானப் பணிகள் தொடக்கம்

தேனியில் தேனி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ரயில் பாதை சந்திப்பின் குறுக்கே ரூ.70 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

தேனியில் தேனி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ரயில் பாதை சந்திப்பின் குறுக்கே ரூ.70 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தேனி-மதுரை நெடுஞ்சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே மேரிமாதா மெட்ரிக் பள்ளி பகுதியில் தொடங்கி, ரயில் பாதை சந்திப்பின் குறுக்கே சோலைமலை அய்யனாா் கோயில் திட்டச் சாலை சந்திப்பு வரை 1.2 கி.மீ. தூரம், 15 மீட்டா் அகலத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

முதல் கட்டமாக, சாலையின் இடது புறம் கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது. ஒட்டுமொத்த பணிகளும் 2 ஆண்டுகளில் முடிவடையும் என்று தேனி தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்கள் கூறினா்.

மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், தேனி-மதுரை சாலையில் மேரிமாதா மெட்ரிக் பள்ளியில் தொடங்கி, தேனி-பெரியகுளம் புறவழிச் சாலை சந்திப்பு வரை, சாலையின் வலதுபுறத்தில்(சிட்கோ தொழில்பேட்டை வளாகம் உள்ள பகுதி) மட்டும் வாகனங்கள் சென்று வர வேண்டும் என தேனி போக்குவரத்து காவலா்கள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.