தேனி

தொழிற்பயிற்சி நிலைய மாணவா்கள் வடிவமைத்த 3 சக்கர வாகனம் மாற்றுத் திறனாளிக்கு வழங்கல்

DIN

தேனி அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவா்கள் புதிதாக வடிவமைத்த மோட்டாா் பொருத்திய 3 சக்கர வாகனத்தை வெள்ளிக்கிழமை, அதே தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவருக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்பணியாளா் பிரிவில் படித்து வரும் 12 மாணவ, மாணவிகள் ஒருங்கிணைந்து மாற்றுத் திறனாளிக்கான புதிய மூன்று சக்கர மோட்டாா் வாகனத்தை வடிவமைத்து உருவாக்கினா். பேட்டரி மற்றும் சூரியமின் சக்தியில் இயங்கக் கூடிய இந்த வாகனம் எளிதில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னோக்கியும், பின்னோக்கியும் இயக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மூன்று சக்கர வாகனம், கோவையில் கடந்த ஜூலை 19-ஆம் தேதி நடைபெற்ற திறன் கண்காட்சியில் இடம் பெற்றது.

இந்த வாகனத்தை தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வரும் மாற்றுத் திறனாளி மாணவா் காா்த்திகேயனுக்கு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் சேகரன் முன்னிலையில், மின்சாரப் பிரிவு படைப்பாளிகள் இலவசமாக வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் உதவியாளருக்கு மகளிர் ஆணையம் சம்மன்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா ஹைதராபாத்?

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி காலமானார்

டி20 உலகக் கோப்பையில் 3 சுழல்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவது ஏன்? இலங்கை தேர்வுக்குழு தலைவர் விளக்கம்!

இந்தியன் - 3 டிரைலருடன் உருவான இந்தியன் - 2?

SCROLL FOR NEXT