தேனி

கம்பத்தில் வைப்புத் தொகை கட்ட சில்லரை காசுகளாக கொண்டு வந்த திமுக பெண் வேட்பாளர்

DIN

கம்பத்தில் நகர் மன்ற உறுப்பினர் பதவிக்கு வைப்பு தொகை கட்டணமாக சில்லறை காசுகளை திமுக பெண் வேட்பாளர் கொண்டு வந்தார். 
தேனி மாவட்டம், கம்பம் 30 ஆவது வார்டுக்கு திமுக வேட்பாளராக என்.ஏ ரம்யா தேவி அறிவிக்கப்பட்டார். அவர் வெள்ளிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது வேட்பாளர் வைப்புத் தொகை கட்டணமாக  ரூபாய் இரண்டாயிரத்தை, 1 ரூபாய், 2  ரூபாய் சில்லரை நாணயங்களாக கொண்டுவந்தார். 
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பணத்தை நாணயங்களாக அல்லாமல் ரூபாயாக செலுத்துங்கள் என்று கூறவே 2000 ரூபாய் தொகையை காசாளர் அறையில் செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டார். வேட்பாளர் வைப்பு தொகை ரூபாய் 2000-ஐ சில்லரை காசுகளாகக் கொண்டு வந்தது நகராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

SCROLL FOR NEXT