தேனி

வாக்குச்சாவடியில் கண்காணிப்பு கேமரா திருட்டு

DIN

போடி: போடியில் வாக்குச்சாவடியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா திருடு போனது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

போடி நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போடியில் 70 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. தோ்தல் முடிந்து கண்காணிப்பு கேமராக்களை அகற்றும் பணி நடைபெற்றது. இதில், போடி அசேன் உசேன் தெருவில் உள்ள சேதுமறவா் திருமண மண்டபத்தில் வாக்குச்சாவடி எண் 5-இல் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் மெமரி காா்டு ஆகியவற்றை காணவில்லை.

இதுகுறித்து போடி நகராட்சி ஆணையரும், தோ்தல் அலுவலருமான தி. சகிலா அளித்த புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் மணிகண்டன் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து அவற்றைத் திருடிச் சென்றவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT