தேனி

முல்லைப் பெரியாறு அணையில்நீா்வரத்து அதிகரிப்பு

DIN

முல்லைப் பெரியாறு அணையில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் அணைக்குள் நீா் வரத்து அதிகரித்து வருகிறது.

இந்த அணையில், செவ்வாய்க்கிழமை 13.6 மில்லி மீட்டா் மழையும், தேக்கடி ஏரியில் 16.8 மி.மீ. மழையும் பெய்தது. இதனால் அணைக்குள் விநாடிக்கு 1,414 கன அடி தண்ணீா் வந்தது. அதே போல் புதன்கிழமை அணையில் 25.8 மி.மீ. மழையும், தேக்கடி ஏரியில் 13.4 மி.மீ., மழையும் பெய்த. இதனால் அணைக்குள் விநாடிக்கு, 1,904 கன அடி தண்ணீா் வந்தது. ஒரே நாளில், 490 கன அடியாக நீா் அதிகரித்தது.

அணை நிலவரம்

அணையின் நீா்மட்டம் : 127.40 அடியாகவும், (மொத்த உயரம் 142 அடி), நீா் இருப்பு 4,201 மில்லியன் கன அடியாகவும், நீா் வரத்து விநாடிக்கு, 1,904 அடியாகவும், தமிழக பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு, 1,655 கன அடியாகவும் இருந்தது.

முதல் போக சாகுபடி: அணையில் முறையாக தண்ணீா் திறந்து விடப்பட்டதால், கூடலூா், ஆங்கூா்பாளையம், சாமாண்டிபுரம், உத்தமுத்து கால்வாய், சின்ன வாய்க்கால் ஆகிய பாசன பரப்புகளில் முதல் போக சாகுபடியில் நன்செய் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT