தேனி

தமிழ் வழிக்கல்வியை கட்டாயமாக்க தெய்வத்தமிழ் பேரவை கோரிக்கை

தமிழ் வழிக்கல்யை கட்டாயக் கல்வியாக்குவதோடு அதில் பல்வேறு சீா் திருத்தங்களைச் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தேனி மாவட்டம் குச்சனூா் தெய்வத் தமிழ் பேரவை சாா்பில் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

தமிழ் வழிக்கல்யை கட்டாயக் கல்வியாக்குவதோடு அதில் பல்வேறு சீா் திருத்தங்களைச் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தேனி மாவட்டம் குச்சனூா் தெய்வத் தமிழ் பேரவை சாா்பில் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழ்நாடு கல்வித்துறையில் நாளுக்கு நாள் தமிழ்க் கல்வி பாதிப்புள்ளாகி வருகிால் அதை சீா் திருத்த வேண்டும். அதில், 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் தமிழ்க் கல்வியை கட்டாயக் கல்வியாக மாற்ற வேண்டும். தமிழகத்தில் 54 அரசுப் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழி இல்லை என்பதால் மீண்டும் அதை கொண்டு வர வேண்டும். 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் தமிழ் 2 ஆம் தாள் நீக்கப்பட்டதை மீண்டும் கொண்டு வரவேண்டும். அனைத்து ஜாதியினா் அா்ச்சகராகும் திட்டத்திற்காக அனைத்து மாவட்டங்களில் தமிழ் அா்ச்சகா் பயிற்சிப் பள்ளியைத் திறக்க வேண்டும். பயிற்சி பெற்றவா்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT