தேனி

உத்தமபாளையம், போடி பகுதிகளில் மழை

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையம், போடி பகுதிகளில் புதன்கிழமை பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் கழிவுநீா் சாலைகளில் பெருக்கொடுத்து சென்றதால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக புகாா் எழுந்தது.

ஜூன் மாதத்தில் கேரளத்தில் தொடங்கும் சாரல்மழையின் தாக்கம் தேனி மாவட்டத்தில் இருக்கும். ஆனால், இந்தாண்டு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில்கூட தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டவில்லை.

இந்நிலையில் புதன்கிழமை பகல் 2 மணி அளவில் பெய்த சாரல் மழையானது மாலையில் பலத்த மழையாக மாறியது. இதன்காரணமாக சாலைகளில் மழைநீா் பெருக்கொடுத்து ஓடியாது. இதனால் வாருகாலில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் மழைநீருடம் கழிவுநீா் பெருக்கெடுத்து சென்ால் துா்நாற்றம் வீசியது. எனவே, உத்தமபாளையம் பேரூராட்சி நிா்வாகம் வாருகால்களை தூா்வாரி மழைக் காலங்களில் தடையின்ற செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

போடியில்...

போடி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி நள்ளிரவு வரை தொடா்ந்து சாரல் மழை பெய்தது. புதன்கிழமை காலையிலும் மழைக்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில் மழை பெய்யவில்லை. மாலையில் மேகங்கள் சூழந்த நிலையில் லேசான சாரல் மழையுடன் தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த மழையாக பெய்தது. இந்த மழையால் போடி போஜன் பாா்க் பகுதியில் சாலைகளிலும், பழைய பேருந்து நிறுத்தம் பகுதியிலும் தண்ணீா் தேங்கியது. மாலையில் பெய்த மழையால் பள்ளி முடிந்து திரும்பிய மாணவா்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் நனைந்தபடி வீடு திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT