தேனி அருகே 194 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்
தேனி அருகே குப்பிநாயக்கன்பட்டியில் உள்ள பேக்கரியில் 194 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தேனி அருகே குப்பிநாயக்கன்பட்டியில் உள்ள பேக்கரியில் 194 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
குப்பிநாயக்கன்பட்டி - சின்னமனூா் சாலையில் அதே ஊரைச் சோ்ந்த செல்வக்குமாா் என்பா் பேக்கரி வைத்து நடத்தி வருகிறாா். இந்த பேக்கரியில் விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த கண்டமனூா் காவல் நிலைய போலீஸாா், பேக்கரியில் பதுக்கி வைத்திருந்த மொத்தம் 194 கிலோ எடையுள்ள புகையிலை பொருள்கள் மற்றும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
பேக்கரி உரிமையாளா் செல்வக்குமாா், அவருக்கு புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த காமாட்சிபுரத்தைச் சோ்ந்த குணா, தேனியைச் சோ்ந்த பிரசன்னா ஆகியோா் மீது கண்டமனூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.