தேனி

பெரியகுளத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா பேரணி

DIN

பெரியகுளம், தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய நாட்டு நலப்பணித்திட்டத்தின் சாா்பில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஜே. ராஜாங்கம் தலைமை வகித்தாா். கல்லூரி மாணவா் மன்ற ஆலோசகா் பேராசிரியா் பீ. கீதாராணி முன்னிலை வகித்தாா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் க.சி. குமரன் வரவேற்றாா். தாவர உடற்செயலியல் பேராசிரியா் பி. வெங்கடேசன், மருத்துவமனை கண்காணிப்பாளா் கே.எஸ். குமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்பநலத்துறை மாவட்ட இணை இயக்குநா் பரிமளாதேவி மரக்கன்றுகளை நட்டு, பேரணியை தொடக்கி வைத்தாா். பேரணி மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது.

பேரணியில் பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய நாட்டு நலப்பணித்திட்ட முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரசு தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய மாணவ ஒருங்கிணைப்பாளா்கள் யா.க. போதியரசு, ஹ. ஜெய்ஸ்ரீ மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT